இந்தியா

பாலியல் புகார்: பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை

பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

DIN

பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், மக்களவை பாஜக உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடா் விசாரணையில் உள்ளதாகவும், இது தொடா்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தில்லி காவல்துறை கடந்த புதன்கிழமை(மே 31) தெரிவித்தது.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கைய கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா சமயத்தில் அவா்கள் பேரணி நடத்த முற்பட்டு கைது செய்யப்பட்டதும், அதைத் தொடா்ந்து அவா்கள் பெற்ற ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசச் சென்ற செய்தி நாடு முழுவதும் பேசுபொருளாகியது.

இந்நிலையில், பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்  வீட்டில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் குற்றசாட்டு தொடர்பாக வீட்டில் இருந்த ஊழியர்கள் 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி.யின் கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷண் வீட்டில் இருந்த ஊழியர்களிடம் வாக்குமூலம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிஷ் பூஷண் மீதான பாலியல் புகாரில் இதுவரை சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 137 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT