முகப்பு
குற்றவாளிகளுக்காக மாறுவேடத்தில் சுற்றிய காவலர்கள்: கைமேல் பலன்
இந்தியா

குற்றவாளிகளுக்காக மாறுவேடத்தில் சுற்றிய காவலர்கள்: கைமேல் பலன்

மும்பையில் சுமார் 93 காவல்நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், குற்றவாளிகளைப் பிடிக்க கொரியர் பாய், செல்லிடப்பேசி சேவை வழங்குவோர் என பல்வேறு மாறுவேடங்கள் போட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:39 AM
குற்றவாளிகளுக்காக மாறுவேடத்தில் சுற்றிய காவலர்கள்: கைமேல் பலன்
பகிர்:

மும்பை: மும்பையில் சுமார் 93 காவல்நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், குற்றவாளிகளைப் பிடிக்க கொரியர் பாய், செல்லிடப்பேசி சேவை வழங்குவோர் என பல்வேறு மாறுவேடங்கள் போட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பேரிடரின் போது பரோலில் வெளியே வந்த குற்றவாளிகள் பலரும் பரோல் காலம் முடிந்த பிறகும் சிறைக்குத்திரும்பவில்லை. வழக்கு விசாரணைக்கும் ஆஜராகவில்லை என்று மும்பை காவல்துறை ஆணையர் அனைத்து காவல்நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

பரோலில் சென்று தலைமறைவானவர்களை நேரடியாக தேடிச் சென்றால் அவர்களுக்கு தகவல் தெரிந்து கண்டுபிடிக்க முடியாத அளவில் தலைமறைவாகிவிடுவார்கள் என்று கருதிய காவல்துறையினர், கொரியர் பாய், ஆசிரியர், செல்லிடப்பேசி சேவை வழங்குவோர் என பல்வேறு மாறுவேடங்களில் அவர்களது முகவரிகளுக்குச் சென்று குற்றவாளிகளை தேடியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் இதுவரை 193 தேடப்படும் குற்றவாளிகள், 95 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கரோனா பேரிடரின் போது அவசரகால பரோலாக 4,237 பேருக்கு பரோல் வழங்கப்பட்டது. அவர்களில் 451 குற்றவாளிகள் சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. அவர்களில் 357 பேர் மீது தலைமறைவானதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
முழு கட்டுரையைப் படிக்க →