இந்தியா

சிபிஐ இணை இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி நியமனம்

சிபிஐ இணை இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி வி.சந்திரசேகரை ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.

DIN

மத்திய புலனாய்வு அமைப்பின் இணை இயக்குநராக குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரி வி.சந்திரசேகரை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. 

சிபிஐ இணை இயக்குநராக சந்திரசேகரை நியமிப்பதற்கான பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் வழங்கியது.

பதவியேற்ற நாளில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு அல்லது இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும்வரை அவர் இப்பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000-ஆம் ஆண்டு பேட்ஜ் குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சந்திரசேகர் இதற்கு முன்பு மத்திய புலனாய்வு அமைப்பின் கீழ் காவல் கண்காணிப்பாளராகவும், டிஐஜியாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT