இந்தியா

பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி போராட்டம்!

பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

DIN

பணமோசடி வழக்கில் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பாஜக தலைமை அலுவலகம் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி, ஆம் ஆத்மி கட்சியினர் டிடியு மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர், ஆனால் காவல்துறையும், துணை ராணுவ வீரர்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை பகலில் பட்டியலிட தில்லி உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

மேலும், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணங்கள் அவரின் வழக்குரைஞருக்கு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

முன்னாள் பிரதமரை நேரில் சந்தித்த மோடி!

பென்ஸ் பிரியர்களுக்கு.. மேபேக் ஜி.எல்.எஸ். கார் அறிமுகம்!

3-ம் நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆனால் ஐடி, ஆட்டோ, பார்மா பங்குகள் சரிவு!

நிதியமைச்சர் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

SCROLL FOR NEXT