முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

விவிபாட் ரசீதை வாக்காளர்களிடம் ஒப்படையுங்கள்: திக்விஜய் சிங் வேண்டுகோள்!

விவிபாட் ரசீதினை வாக்காளர்களிடம் கொடுத்துவிட்டு, பின்பு அதனை வேறு தனிப் பெட்டியில் சேகரிக்குமாறு மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.

இந்தியா

விவிபாட் ரசீதை வாக்காளர்களிடம் ஒப்படையுங்கள்: திக்விஜய் சிங் வேண்டுகோள்!

விவிபாட் ரசீதினை வாக்காளர்களிடம் கொடுத்துவிட்டு, பின்பு அதனை வேறு தனிப் பெட்டியில் சேகரிக்குமாறு மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
கோப்புப்படம்
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலின்போது விவிபாட் ரசீதுகள் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்பு அவை வேறொரு பெட்டியில் சேகரிக்கப்படவேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “எங்களுக்கு ஒரு கோரிக்கை உள்ளது. விவிபாட் ரசீதினை வாக்காளர்களிடம் தனியாக கொடுத்து விடுங்கள். பின்பு அதனை வேறொரு பெட்டியில் சேகரித்து கொள்ளுங்கள். 

வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக, அச்சீட்டுகளை சேகரித்து வைத்திருக்கும் ஏதாவது 10 பெட்டிகளில் உள்ள வாக்குச் சீட்டுகளை எண்ணி, அதனை வாக்குப்பதிவு எண்ணிக்கையுடன் சரிபார்க்கவும். இரண்டின் முடிவுகளும் சரியாக இருந்தால் பின்பு தேர்தல் முடிவுகளை வெளியிடவும். 

இதனைச் செய்வதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பிரச்சினை? உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

மேலும்,  மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது விவிபாட் இயந்திரத்தில் ஒரே கட்சியின் சின்னம் பதிவானது குறித்த செய்தியையும் திக்விஜய் சிங் பகிர்ந்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →