FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிக்கிம் : வெள்ளத்தில் மாயமான 77 பேர் இறந்திருக்கக்கூடும் - அதிர்ச்சி தகவல்!

சிக்கிமில் 2 மாதங்களுக்கு முன்பு மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் மாயமான 77 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.  

6 பிப்ரவரி 2024, 6:50 pm
கோப்புப்படம் : தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
பகிர்:

கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெருவெள்ளத்தில் சிக்கி 46  பேர் உயிரிழந்தனர். மேலும், வெள்ளத்தில் 77 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அதில் 2 பேரின் உடல்கள், அடையாளம் தெரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்டன.  

இந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட  77 பேரை  தேடும் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக  நடைபெற்று வந்த நிலையில், அவர்களின் கதி என்ன என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 மாதங்களைக் கடந்து விட்ட நிலையில், மாயமானவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், அவர்கள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் எனவும் சிக்கிம் தலைமைச் செயலாளர் விபி பதாக் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர்களின் குடும்பத்துக்கு, இயற்கை பேரிடர்களால் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் கீழ், மாநில அரசு நிவாரணத் தொகையாக ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும்  நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.