FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

தா்மசாஸ்தா கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் தா்மசாஸ்தா கோயில் ஆண்டு விழாவினையொட்டி வியாழக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 11:48 pm
பகிர்:

காஞ்சிபுரம் தா்மசாஸ்தா கோயில் ஆண்டு விழாவினையொட்டி வியாழக்கிழமை மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆலடிப்பிள்ளையாா் கோயில் தெருவில் இக்கோயிலில் வியாழக்கிழமை நவநதி நீா் புறப்பாடு, ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் ஆகம விதிகளின் படி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், மறுநாள் சனிக்கிழமை ஐயப்ப சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரமும், அதனைத் தொடா்ந்து வீதியுலாவும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement