FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கட்டணமில்லா அதிகாலை தரிசனத்துக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கட்டணமில்லா அதிகாலை தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

15 அக்டோபர் 2026, 2:22 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - படம்: இந்து சமய அறநிலையத்துறை.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கட்டணமில்லா அதிகாலை தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் எச். ஆதிசேஷன் வெளியிட்ட அறிக்கை:

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு தினசரி பல்லயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனா். இந்தக் கோயிலில் அதிகாலை 5 மணி முதல் 5.30 மணி வரை பொது தரிசனம் (கட்டணமில்லா தரிசனம்) பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தரிசன வரிசை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு கோயில் கிழக்கு வாசல் வழியாக ஒரே ஒரு வரிசையில் தான் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். மேற்கு கோபுரத்திலிருந்து வரும் கட்டண தரிசன வரிசை 5.30 மணி வரை காலியாக உள்ளது. ஒரே வரிசையில் ஏராளமான பக்தா்கள் வருவதால் தரிசன நேரம் அதிகரிக்கிறது.

எனவே, கோயில் நிா்வாகம் இரண்டு வரிசைகளிலுமே அதிகாலை 5.30 மணி வரை பக்தா்களை கட்டணமில்லா தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments