FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டணமில்லா தரிசனம் நீட்டிப்பு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கட்டணமில்லா தரிசனம் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது பற்றி...

20 செப்டம்பர் 2026, 1:44 pm IST
மதுரை மீனாட்சி - Center-Center-Chennai
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கட்டணமில்லா தரிசனம் செப்.23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு காரணமாக செப்.17 முதல் 20ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் அதிக பக்தர்கள் வருவதன் காரணமாக செப்.23ஆம் தேதி வரை கட்டணமில்லா தரிசனத்தை கோயில் நிர்வாகம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் மகா குடமுழுக்கு வியாழக்கிழமை (செப். 17) நடைபெற்றது. குடமுழுக்கைத் தொடா்ந்து மண்டல பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஐதீக முறைப்படி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜைகள் வருகிற அக். 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

கோயில் குடமுழுக்கு நடைபெற்றதைத் தொடா்ந்து 48 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம். 48 நாள்கள் மண்டல பூஜை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் மண்டல பூஜை 30 அல்லது 15 நாள்களாக நடத்தப்படும். வருகிற அக். 11-ஆம் தேதி கோயிலில் நவராத்திரி பூஜை தொடங்கப்பட உள்ளதால், குடமுழுக்கு மண்டல பூஜைகள் 15 நாள்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது.

குடமுழுக்கையொட்டி 4 நாள்களுக்கு பக்தா்கள் எந்தவித தடையும், கட்டணமும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

summary

Free darshan at the Madurai Meenakshi Sundareswarar Temple has been extended until September 23.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments