மீனாட்சியம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி....
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, பயணிகள் மற்றும் பக்தர்களின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் – மதுரை எக்ஸ்பிரஸ்:
Advertisement
Advertisement
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து செப். 16 ஆம் தேதி மாலை 4.10 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மறுநாள் (செப்டம்பர் 17) காலை 4.30 மணிக்கு மதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மதுரையில் இருந்து செப். 17 பிற்பகல் 3.30 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 18) அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
தாம்பரம் – மதுரை அதிவிரைவு ரயில்:
தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 16ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 17) காலை 5.00 மணிக்கு மதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மதுரையிலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு ரயில் புறப்பட்டு, மறுநாள் (செப்டம்பர் 18) அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
சென்னை கடற்கரை – மானாமதுரை மெமு ரயில்:
சென்னை கடற்கரையிலிருந்து செப்டம்பர் 16ஆம் தேதி காலை 10.45 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு மானாமதுரையை அடையும். இதேபோல், மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து செப்டம்பர் 17ஆம் தேதி நண்பகல் 12.00 மணிக்கு ரயில் புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த ரயிலில் 12 முன்பதிவில்லா மெமு பெட்டிகள் இணைக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8.00 மணிக்குத் தொடங்கும். கும்பாபிஷேக விழாவிற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பயணிகள் இந்தச் சிறப்பு ரயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Southern Railway announces special trains to tackle extra passenger rush for the Madurai Meenakshi Amman Temple Kumbhabhishekam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.