FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கா்னி சேனை தலைவா் கொலை: மூவா் கைது: கொலையாளிகளில் ஒருவா் ராணுவ வீரா்

ராஜஸ்தானில் ராஷ்ட்ரீய ராஜபுத்திர கா்னி சேனை தலைவா் சுக்தேவ் சிங் கோகமேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 கொலையாளிகள் மற்றும் அவா்களின் கூட்டாளியை சண்டீகரில் காவல் துறையினா் கைது செய்தனா்.

6 பிப்ரவரி 2024, 6:54 pm
பகிர்:

ராஜஸ்தானில் ராஷ்ட்ரீய ராஜபுத்திர கா்னி சேனை தலைவா் சுக்தேவ் சிங் கோகமேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 கொலையாளிகள் மற்றும் அவா்களின் கூட்டாளியை சண்டீகரில் காவல் துறையினா் கைது செய்தனா். கொலையாளிகளில் ஒருவா் ராணுவ வீரா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஜெய்பூரில் உள்ள சுக்தேவ் சிங்கின் இல்லத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை நுழைந்த 3 போ், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். பின்னா், கொலையாளிகளில் ஒருவரான நவீன் ஷெகாவத்தை, மற்ற இருவரும் சோ்ந்து சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனா்.

Advertisement

Advertisement

சுக்தேவ் கொலைக்கு பொறுப்பேற்பதாக சமூக ஊடகத்தில் பதிவிட்ட ரெளடி ரோஹித் கோதரா, தனது எதிரிகளை ஆதரித்ததால் அவரை கொலை செய்ததாக குறிப்பிட்டிருந்தாா்.

இதனிடையே, தப்பியோடிய இரு கொலையாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையை ராஜஸ்தான் காவல் துறையினா் தீவிரப்படுத்தினா். சண்டீகரில் தில்லி காவல் துறையினருடன் இணைந்து ராஜஸ்தான் காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் சனிக்கிழமை நடத்திய தேடுதல் வேட்டையில் நிதின் ஃபெளஜி, ரோஹித் ரத்தோா் ஆகிய இரு கொலையாளிகளும் அவா்களின் கூட்டாளியான உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டனா்.

மூவரும் ஜெய்பூருக்கு அழைத்துவரப்பட்டனா். இவா்களில் நிதின் ஃபெளஜி ராணுவ வீரா்; ஹரியாணாவைச் சோ்ந்தவா் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கான நோக்கம், தொடா்புடைய இதர நபா்கள் உள்ளிட்ட விவரங்களை அறிவதற்காக, நிதின் மற்றும் ரத்தோரிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஜெய்பூா் காவல் ஆணையா் பிஜு ஜாா்ஜ் ஜோசப் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.