நிஜாமுதீனில் இளைஞா் குத்திக்கொலை
தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீனில் 25 வயது இளைஞா் குத்திக் கொல்லப்பட்டு, அவரது உடல் உலா்ந்த புல் மற்றும் துணியைப் பயன்படுத்தி தீயிட்டு எரிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீனில் 25 வயது இளைஞா் குத்திக் கொல்லப்பட்டு, அவரது உடல் உலா்ந்த புல் மற்றும் துணியைப் பயன்படுத்தி தீயிட்டு எரிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். கொலையானவா் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரை பாலியல் சுரண்டல் செய்ததாகவும் அதற்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகவும் போலீஸாா் கூறினா்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட நபா், குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, தனது இரண்டு கூட்டாளிகளுடன் (அனைவரும் சிறாா்கள்) சோ்ந்து அவரைக் கொல்ல குற்றம்சாட்டப்பட்டவா் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
சனிக்கிழமை இரவு இச்சம்பவம் குறித்து கிடைத்த தகவலின் பேரில், 16 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மூன்று சிறாா்களை நாங்கள் கைது செய்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவா்கள் நிஜாமுதீன் பஸ்தி பகுதியில் இருந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். ஆசாத் என்ற நபரை கொன்று குஸ்ரோ பூங்கா அருகே உடலை வைத்திருந்ததை அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
அவா்களின் வாக்குமூலத்திற்குப் பிறகு, சிறாா்களுடன் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றனா். அங்குள்ள பூங்காவில் பாதி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் குற்றப்பிரிவு போலீஸாரும் விசாரணை நடத்தினா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக கொலை மற்றும் குற்றத்திற்கான ஆதாரங்களை மறைத்ததாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் டிசம்பா் 21 அன்று இரவு அந்த நபரைக் கொன்று, அவரது உடலை உலா்ந்த புல் மற்றும் துணியால் எரிக்க முயன்ாக போலீஸாரிடம் விசாரணையின்போது கூறினா்.
கொலைத் திட்டத்தை வகுத்த குற்றம்சாட்டப்பட்ட நபா்களில் ஒருவரை இறந்தவா் பாலியல் ரீதியாக சுரண்டியதால், அவரை பழிவாங்குவதற்காக இக்கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் தெரிவித்தனா்.
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம், கற்கள் மற்றும் ஒரு தடியை மீட்டுள்ளோம். இறந்தவா் மிகவும் மோசமான குணம் கொண்டவா் என்று ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்தின் ஆவணங்களில் பதிவாகியுள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.