முகப்பு
இந்தியா

தொடரும் அமளி: மாநிலங்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை மேலும் 2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி 2023, 2:48 pm IST
பகிர்:

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை மேலும் 2 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே 3 நாள்கள் முடங்கிய நிலையில் 4-வது நாளாக அமளி காரணமாக நாடளுமன்ற இரு அவைகளும் இன்று காலை முதல் முடங்கியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஒத்திவைப்புத் தீா்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

இந்நிலையில், இன்றும் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் இன்று காலை நாடாளுமன்றக் கூட்டம் கூடியவுடன் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, 12 மணிக்கு இரு அவைகளும் கூடிய நிலையில், மாநிலங்களவையில் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணிவரை கூட்டத்தை ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments