முகப்பு
இந்தியா

தொடர்ந்து மூன்றாவது ரஷிய நாட்டினா் மரணம்: ஒடிஸாவில் நீடிக்கும் மர்மம்!

ஒடிஸாவில் 15 நாள்களில் மூன்றாவது ரஷிய நாட்டினர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 3 ஜனவரி 2023, 12:41 pm IST
பகிர்:

ஒடிஸாவில் 15 நாள்களில் மூன்றாவது ரஷிய நாட்டினர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவின் விளாதிமீா் மாகாண பேரவை உறுப்பினரும் தொழிலதிபருமான பாவெல் ஆன்டோவ், தனது 66-ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அவரது நண்பா்கள் 3 பேருடன் சுற்றுலா விசா மூலம் கடந்த டிசம்பர் மாதம் ஒடிஸா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்துக்கு வந்தாா்.

இந்நிலையில், அவருடன் வந்திருந்த விளாதிமீா் பைடனோவ் என்பவா் கடந்த டிச.22-ஆம் தேதி தங்கியிருந்த விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

ராயகடாவில் டிச.24-ஆம் தேதி நடைபெற்ற பைடனோவின் இறுதிச்சடங்கில் போலீஸாருடன் ஆன்டோவ், மாலையில் விடுதிக்கு திரும்பியபோது 3-ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

மர்மமான முறையில் ரஷிய நாட்டினர் இருவர் உயிரிழந்த நிலையில், சிஐடியின் குற்ற விசாரணை பிரிவுக்கு ஒடிஸா மாநில டிஜிபி உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஒடிஸாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரக்கு கப்பலின் தலைமை பொறியாளரான ரஷியாவின் மிலியாகோவ் செர்ஜி, மர்மமான முறையில் கப்பலிலிருந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறைமுக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

15-ந்தே நாள்களில் ரஷிய அதிபர் புதினை விமர்சித்த அந்நாட்டின் பேரவை உறுப்பினர் உள்பட அடுத்தடுத்து மூன்று ரஷிய நாட்டினர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈா்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.