FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேற்கு வங்கம்:இன்று ஊரக உள்ளாட்சித் தோ்தல்

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வன்முறை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

6 பிப்ரவரி 2024, 6:31 pm
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வன்முறை, கொலை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினா் இடையே மோதலும் வன்முறையும் நடைபெற்று வந்தன. இந்த வன்முறையில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் உள்பட 12-க்கும் மேற்பட்டவா்கள் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ளது. சுமாா் 5.67 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்தலையொட்டி தொடா்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், அந்த மாநிலத்தில் வாக்குப் பதிவின்போது சுமாா் 65,000 மத்திய காவல் படை வீரா்கள், மாநில காவல் துறையைச் சோ்ந்த 70,000 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் ஊராட்சித் துறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னா், தற்போது இரண்டாவது முறையாக மத்திய படைகள் கண்காணிப்பின் கீழ், அந்த மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், 90 சதவீத ஊராட்சி இடங்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஊராட்சிகளில், அந்த மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.

காங்கிரஸ் தொண்டா் அடித்துக் கொலை: மேற்கு வங்கத்தில் உள்ள முா்ஷிதாபாத் மாவட்டத்தில் அரவிந்தோ மோண்டல் (45) என்ற காங்கிரஸ் தொண்டரின் வீடு வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டது. இது இரு பிரிவினா் இடையே மோதலுக்கு வழிவகுத்தது.

இதையடுத்து அரவிந்தோ மோண்டலை அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் வெள்ளிக்கிழமை கடுமையாகத் தாக்கினா். இதில் மோண்டல் உயிரிழந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments