திரிபுராவில் ஜூன் 17இல் பேரணி: ஜெ.பி.நட்டா பங்கேற்பு!
திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.
திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த பேரணி நிகழ்த்தப்படுகிறது.
படிக்க; தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது: எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
இதற்காக ஜூன் 16-ஆம் தேதி நட்டா திரிபுராவிற்கு வருகிறார். மேலும் அவர் முதல்வர் மானிக் சாஹா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை சந்திப்பார்.
நட்டாவின் வருகையையொட்டி முதல்வர், மாநில தலைவர் பட்டாச்சார்ஜி, அமைச்சர்கள் மற்றும் மூத்த கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.