நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2,791 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2,791 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 324 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி
Advertisement
Advertisement
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை சார்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று (மார்ச் 5) காலை 8 மணி வரை நிலவரப் படி கரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக 5,30,775 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,87,820 ஆக உள்ளது. தேசிய அளவில் கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.80 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 சதவிகிதமாக இருக்கிறது. இதுவரை 220.64 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.