FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது தொடர்பாக...

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! - படம்: IMD
பகிர்:

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

Advertisement

Advertisement

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ. 15) அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தொடர்ந்து, இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நாளை (நவ.16) மாலை ‘அக்வான்’ புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

இந்தப் புயல் சின்னம் இது ஸ்ரீ விஜய புரம் (போர்ட் பிளேர் - அந்தமான் தீவுகள்) நகரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 700 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 860 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1040 கி.மீ தொலைவிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) தெற்கு - தென்கிழக்கே 1160 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது தொடர்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வலுவடைந்து, நவம்பர் 16-ல் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்கக் கடல்பகுதியில் 'அக்வான் புயலாகவும்', நவ. 17 ஆம் தேதி மேற்கு-மத்திய வங்கக் கடல்பகுதியில் 'தீவிர புயலாகவும்' வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலை சூழல்கள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வட உள்மாவட்டங்கள் மற்றும் ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்.

summary

The India Meteorological Department has stated that the deep depression over the Bay of Bengal has intensified into a depression.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.