FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது குறித்து...

வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்! - கோப்புப்படம்
பகிர்:

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.

இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (அக். 26) காலை மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகியுள்ளது. இதற்கு அா்னாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

'அர்னாப்' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து தீவிரப் புயலாகவும், மிக தீவிரப் புயலாகவும் வலுவடைந்து ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும்.

ஆந்திரம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

Cyclone 'Arnab' has formed in the Bay of Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments