ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு!
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சிறுவன் 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 43 அடி ஆழத்தில் சிக்கிய நிலையில், சிறுவனை மீட்க ஜேசிபி இயந்திரம் மூலம் அதற்கு இணையான குழி தோண்டப்பட்டது.
படிக்க: 12 ராசிக்குமான பங்குனி மாத பலன்கள்!
Advertisement
Advertisement
சுமார் 24 மணி நேரப் போரட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுவன், மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் உள்ள லேட்டரி நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டுசெல்லப்பட்டான்.
சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.