ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்!
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அரவிந்த் கேஜரிவால் நாளை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால்.
Advertisement
Advertisement
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார்.
இதையும் படிக்க: ஒருவேளை மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு
இந்த நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.