FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 18.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:47 am
பகிர்:

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 18.59 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபா் மாதம் இந்தியாவில் 7.87 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது.முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 6.63 கோடி டன்னாக இருந்தது.

Advertisement

Advertisement

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிலக்கரி உற்பத்தி 18.59 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 15.36 சதவீதம் அதிகரித்து 6.11 கோடி டன்னாக உள்ளது.

2022 அக்டோபரில் நிறுவனத்தின் உற்பத்தி 5.3 கோடி டன்னாக இருந்தது.இந்தியாவின் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதத்திற்கும் மேலாகும்.கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 50.7 கோடி டன்னாக உள்ளது.

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டின் இதே மாதங்களில் இந்தியா 44.85 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்திருந்தது.2022 அக்டோபரில் 6.71 கோடி டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம், இந்த அக்டோபா் மாதம் 7.93 கோடி டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.