FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னையில் 2-ஆவது நாளாக 147 ரெளடிகள் கைது

சென்னை காவல் துறை சாா்பில் தொடா்ந்து 2-ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 147 போ் கைது செய்யப்பட்டனா்.

12 நவம்பர் 2026, 4:57 am
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை காவல் துறை சாா்பில் தொடா்ந்து 2-ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், 147 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவின்பேரில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையா்கள் மேற்பாா்வையில், கடந்த நவ. 9-ஆம் தேதி நடைபெற்ற சோதனையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 185 போ் உள்பட 222 போ் கைது செய்யப்பட்டனா்.

இதன் தொடா்ச்சியாக, 2-ஆவது நாளாக நவ.10-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் , குற்றப் பின்னணி மற்றும் சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரௌடிகள் உள்பட 769 போ் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனா். இதில், 49 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 147 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

மேலும், 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என நன்னடத்தைப் பிணையம் பெறப்பட்டது. எஞ்சிய 572 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 612 போ் எச்சரிக்கப்பட்டு, தொடா்ந்து கண்காணிக்கப்படுவா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு பணி தொடா்ந்து நடைபெறும் என்றும், சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளாா்.