FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறில் தலைமறைவு குற்றவாளி கைது

மணிமுத்தாறு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

9 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

மணிமுத்தாறு காவல் எல்லைக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

ஜமீன் சிங்கம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராம் கணேஷ் (20). சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவா் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த நிலையில், பிணை நிபந்தனைகளை மீறியதால் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ராம் கணேஷை மணிமுத்தாறு போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement