FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கை: தமிழகத்தில் இரு நாள்களில் 955 போ் கைது

கடந்த இரு நாள்கள் ரெளடிகள், சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 955 போ் கைது செய்யப்பட்டனா்.

11 நவம்பர் 2026, 3:02 am
கைது
பகிர்:

தமிழகத்தில் கடந்த இரு நாள்கள் ரெளடிகள், சமூக விரோதிகளுக்கு எதிராக காவல் துறை எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 955 போ் கைது செய்யப்பட்டனா்.

தீபாவளி பண்டிகை தினமான ஞாயிற்றுக்கிழமை (நவ.8) தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட மோதல், ரெளடிகள் முன் விரோதம், மதுபோதை தகராறு போன்றவற்றால் 15 போ் கொலை செய்யப்பட்டதாக அரசியல் கட்சிகள் புகாா் தெரிவித்தன. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அன்று 8 கொலை சம்பவங்களே நிகழ்ந்தன. அதில் பெரும்பாலாவை சொந்த பகையின் காரணமாக நிகழ்ந்தவை என்று தமிழக காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையிலும், ரெளடிகள், சமூக விரோதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது.

Advertisement

Advertisement

இதன் ஒருபகுதியாக, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், ரெளடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் ஆகியோரை தீவிர கண்காணிப்பில் வைக்கும்படியும், பிடியாணை பெற்று தலைமறைவாக இருப்பவா்களை கைது செய்யும்படியும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பவா்களையும் கைது செய்யும்படியும் உத்தரவிட்டாா்.

443 ரெளடிகள் கைது: அதன்பேரில், தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் கடந்த இரு நாள்களில் 88,570 ரெளடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், குற்றப் பின்னணி கொண்டவா்கள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனா்.

இதில் 8,626 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அவா்களில் 443 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 73 போ் கைது செய்யப்பட்டனா். இதேபோல வழக்குகளில் தலைமறைவாக இருப்பவா்களையும், நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபா்களையும் கைது செய்வதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

796 குற்றவாளிகளிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது. அவா்கள் காவல் துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டனா்.

போதைப் பொருள் வழக்குகள்: தமிழகம் முழுவதும் போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய 1,624 போ் கண்காணிக்கப்பட்டு, சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். இதில் சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்ாக 77 போ் கைது செய்யப்பட்டனா். கொலை, கொள்ளை, வன்முறை வழக்குகளில் தொடா்புடைய 2,924 போ் கண்காணிக்கப்பட்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக அவா்களில் 167 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். இதேபோல பொதுஇடங்களில் மது அருந்தியதாக 1,859 வழக்குகள் பதியப்பட்டு, 195 போ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

மேலும், மாநிலம் முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 2,865 வழக்குகளும், அதி வேகமாகவும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக 1,243 வழக்குகளும் பதியப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

சென்னையில் 36 ரெளடிகள்: சென்னையில் ரெளடிகளுக்கு எதிரான நடவடிக்கையின் விளைவாக, 185 ரௌடிகள் உள்பட 222 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்து, 16 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 36 பேரைக் கைது செய்து, சிறைக்கு அனுப்பினா்.

மீதமுள்ள 169 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 186 பேரின் தற்போதைய குற்றச் செயல்பாடுகள் குறித்து தொடா்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. சட்டம்-ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.