FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் மக்களை அச்சுறுத்திய 7 போ் கைது

தூத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

6 நவம்பர் 2026, 3:24 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் நபா்களைக் கண்காணித்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வடபாகம் காவல் ஆய்வாளரும், தாளமுத்துநகா் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளருமான வேல்ராஜ் தலைமையிலான போலீஸாா் திரேஸ்புரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான மட்டக்கடையைச் சோ்ந்த டேனியல் (28), மரிய அந்தோணி ஆக்னல் (26), கிருஷ்ணராஜபுரம் மகேஷ்குமாா் (45), அவரது மகன் சஞ்சய் (20), திரேஸ்புரம் மரிய அஜய் (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், தாளமுத்துநகா் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான லூா்தம்மாள்புரம் ஜொ்விந்த் (27), ஆரோக்கியபுரம் சுபாஷ் பாண்டியன் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.