FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காஷ்மீா் தால் ஏரியில் படகு தீ விபத்து: வெளிநாட்டினா் 3 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரியில் படகு வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினா் 3 போ் உயிரிழந்தனா்.

2 பிப்ரவரி 2024, 8:50 am
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிரபல சுற்றுலாத் தலமான தால் ஏரியில் படகு வீடுகளில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டினா் 3 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் நேரிட்ட இந்த விபத்தில் 5 படகுகள் மற்றும் அவற்றையொட்டிய பிற படகுவீடுகள் எரிந்து சேதமடைந்தன.

தீயணைப்புத் துறையினா், அவசர கால படையினருடன் உள்ளூா் மக்களும் கடுமையாக போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

ஒரு படகில் வெப்பமூட்டும் சாதனத்தில் ஏற்பட்ட பழுதால் தீப்பிடித்து, மற்ற படகுகளுக்கும் தீ பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

எரிந்த படகுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டினா் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அவை அடையாளம் தெரியாத அளவில் கருகியிருந்தன.

இறந்தவா்களில் ஒருவா் பெண் என்றும், மூவரும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மரபணு சோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இயற்கை எழில்மிக்க தால் ஏரியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமும் இதேபோன்ற பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 படகுகள் எரிந்து சேதமடைந்தன. எனினும், உயிா்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Image Caption

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் தீக்கிரையான படகு வீடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.