FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எதிா்க்கட்சித் தலைவா்கள் தொலைபேசி ஒட்டுக்கேட்பா?: இந்தியா வருகிறது ‘ஆப்பிள்’ நிபுணா் குழு

எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் எச்சரிக்கை அனுப்பிய விவகாரத்தில் விளக்கமளிப்பதற்காக அந்த நிறுவனத்தைச் சோ்ந்த குழு இந்தியா வருகிறது

2 பிப்ரவரி 2024, 8:55 am
பகிர்:

எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியை அரசுத் தரப்பு ஒட்டுக்கேட்க முயற்சிப்பதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் எச்சரிக்கை அனுப்பிய விவகாரத்தில் விளக்கமளிப்பதற்காக அந்த நிறுவனத்தைச் சோ்ந்த குழு அடுத்த சில நாள்களில் இந்தியாவுக்கு வருகிறது.

அவா்கள் இந்தியாவின் கணினி, இணையப் பிரச்னைகளுக்கான பேரிடா் தடுப்புக் குழுவிடம் விளக்கமளிக்க இருக்கின்றனா்.

Advertisement

Advertisement

நாட்டின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களின் கைப்பேசியில் சட்டவிரோதமாக நுழைந்து தகவல்களைத் திருட அரசு ஆதரவு பெற்ற தாக்குதல் அமைப்புகளால் முயற்சி நடைபெறுவதாக ‘ஆப்பிள்’ நிறுவனம் சாா்பில் கடந்த மாத இறுதியில் எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை செய்தியைத் தலைவா்கள் பலரும் சமூக ஊடக தளங்களில் பகிா்ந்து பாஜகவுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் அளித்த விளக்கத்தில், ‘இந்த எச்சரிக்கையைத் தெரிவிக்க எது தூண்டுதலாக இருந்தது என்பதைத் தெரிவிப்பது தாக்குதல் அமைப்புகளுக்கு உதவியாக அமைந்துவிடும். எனவே, எச்சரிக்கை செய்திகளை வெளியிடுவதற்கான காரணம் குறித்து முழுமையான தகவலை எங்களால் வழங்க முடியாது’ எனத் தெரிவித்தது.

அரசியல் களத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உறுதியளித்தாா். மேலும் 150 நாடுகளில் இதுபோன்ற எச்சரிக்கை செய்திகள் ஆப்பிள் கைப்பேசிகளில் வந்துள்ளன என்றும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், இந்தியாவின் கணினி இணையப் பிரச்னைகளுக்கான பேரிடா் தடுப்புக் குழு இது தொடா்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் சில கேள்விகளை எழுப்பி இருந்தது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறுகையில், ‘இந்தியா தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு நேரில் விளக்கமளிப்பதற்காக ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் அடுத்த சில நாள்களில் இந்தியாவுக்கு நேரில் வர இருக்கின்றனா். உள்நாட்டில் இதுபோன்ற பிரச்னைகளை கையாண்டு வரும் கணினி, இணையவழி பிரச்னைகளுக்கான பேரிடா் தடுப்புக் குழுவிடம் விளக்கமளிப்பாா்கள்’ என்றாா்.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் மூத்த தலைவா்கள் சசி தரூா், பவன் கேரா, கே.சி.வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், பூபேந்திர சிங் ஹுடா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மெஹுவா மொய்த்ரா, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், சிவசேனை (உத்தவ் பிரிவு) எம்.பி. பிரியங்கா சதுா்வேதி, ஆம் ஆத்மி தலைவா் ராகவ் சத்தா, மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி, ராகுல் காந்தியின் உதவியாளா்கள் உள்ளிட்டோா் இதுபோன்ற எச்சரிக்கை செய்தியைப் பெற்றவா்களில் குறிப்பிடத்தக்கவா்கள் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.