FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி:பஞ்சாப் எஸ்.பி. பணியிடை நீக்கம்

கடந்த ஆண்டு பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமா் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிகழ்வு தொடா்பாக காவல் துறைக் கண்காணிப்பாளா் குா்பிந்தா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

2 பிப்ரவரி 2024, 8:55 am
பகிர்:

கடந்த ஆண்டு பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தின்போது பிரதமா் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட நிகழ்வு தொடா்பாக காவல் துறைக் கண்காணிப்பாளா் குா்பிந்தா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு ஜனவரியில் பிரதமா் மோடி பஞ்சாப் சென்றாா். அப்போது அங்குள்ள ஃபெரோஸ்பூா் பகுதியில் சாலையை மறித்து விவசாயிகள் பலா் பேராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள மேம்பாலத்தில் பிரதமா் மற்றும் அவரின் பாதுகாப்பு வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னா், அங்கு திட்டமிட்டிருந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், பிரதமா் மோடி பஞ்சாபில் இருந்து திரும்பினாா். இந்த நிகழ்வு பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

பிரதமா் ஃபெரோஸ்பூா் வந்தபோது, அங்கு காவல் துறை கண்காணிப்பாளராக இருந்தவா் குா்பிந்தா் சிங். அந்த நிகழ்வு தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்னா், பஞ்சாப் உள்துறை அமைச்சகத்திடம் மாநில காவல் துறை டிஜிபி அறிக்கை சமா்ப்பித்தாா்.

அந்த அறிக்கையில், ‘குா்பிந்தா் சிங் சரியாகப் பணியாற்றாமல் கடமை தவறியதால், ஃபெரோஸ்பூரில் பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது’ என்று தெரிவித்தாா். இதையடுத்து, பதிண்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த குா்பிந்தா் சிங்கை பணியிடை நீக்கம் செய்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.