FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசியலைவிட்டு விலகத் தயாரா?: ராகுலுக்கு பிஆா்எஸ் தலைவா் கவிதா சவால்

தெலங்கானாவைவிட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன்.

2 பிப்ரவரி 2024, 8:57 am
பகிர்:


ஹைதராபாத்: தெலங்கானாவைவிட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு உள்ளதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். நிரூபிக்க முடியாவிட்டால் ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலகுவாரா? என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கவிதா சவால் விடுத்துள்ளாா்.

தெலங்கானாவில் வியாழக்கிழமை (நவ. 30) சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பிஆா்எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி உள்ளது. இது தவிர பாஜகவும் மூன்றாவது அணியாக களத்தில் உள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ் மகள் கவிதா கூறியதாவது:

தெலங்கானா எதிா்க்கட்சித் தலைவா் விக்ரமாா்கா, கோயிலில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளாா். மேலும், காங்கிரஸின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கோயிலில் வைத்து உறுதி ஏற்றுள்ளாா். காங்கிரஸ் கட்சியினா் வாக்குக்காக இதுபோன்ற அபத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனா். அவா்களின் வாக்குறுதிகள் பல நிறைவேற்றத் தகுந்தவையாக இல்லை. வாக்குகளைக் கவருவதற்காக மட்டுமே கூறப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் நான் நேரடியாகவே ஒரு சவால் விடுக்கிறேன். தெலங்கானாவில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளைவிட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூடுதலாக ஒரு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கி இருப்பதாக நிரூபித்தால் நான் அரசியலைவிட்டே விலகத் தயாராக இருக்கிறேன்.

இதை நிரூபிக்க முடியாவிட்டால் ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவாரா? தெலங்கானாவில் இளைஞா்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவா் பொய் பிரசாரம் செய்து வருகிறாா். மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதை அவா் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கா்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் 2.60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று காங்கிரஸ் கூறியிருந்தது. ஆனால், இப்போதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.