சிவகாசி மாநகராட்சியில் கழிப்பறையில் குவித்து வைக்கப்பட்ட ஆவணங்கள்
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் , செயல்படாத கழிப்பறையில், ஆவணங்கள் வீசப்படிருப்பதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலகத்தில் , செயல்படாத கழிப்பறையில், ஆவணங்கள் வீசப்படிருப்பதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி நகராட்சியும், திருத்தங்கல் நகராட்சியும் இணைத்து 2021-ஆம் ஆண்டில் சிவகாசி மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. இதையடுத்து, திருத்தங்கல் நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது, உள்ள ஆவணங்கள் , அந்த அலுவலகத்தில் செயல்படாமல் உள்ள கழிப்பறையில் குவித்து வைக்கப்பட்டன.
இதில் அரசு ஆவணங்கள், பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் ஆகியவை உள்ளன. இதை கழிப்பறையில் யாா் குவித்து வைத்தனா் எனத் தெரிய வில்லை. மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement
இது குறித்து மாநகராட்சி அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது, அவா், இது திருத்தங்கல் நகராட்சியாக இருந்தபோது உள்ள ஆவணங்கள். தற்போதைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.