ஆதித்யா-எல்1 விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு!
ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.
சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்வதைக் காண முன்பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலத்தைக் காண 10,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 29-ம் தேதி இணைய முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களில் மொத்த முன்பதிவும் முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.