மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் தொடங்கியது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் நோக்கம் குறித்து இதுவரை ரகசியம் காக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியுள்ளது.
Advertisement
Advertisement
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்த அலுவல் விவரங்கள் முறையாக வெளியிடப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதில், விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, சீன எல்லை அத்துமீறல்கள், அதானி நிறுவன முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.