Fire 
இந்தியா

வெடிபொருள் தயாரித்த சிறுவர்கள்! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

யூடியூப் பார்த்து வெடிபொருள் தயாரித்ததில் விபத்து

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் வெடிபொருள் தயாரித்த விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்தனர்.

பிகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில், 5 சிறுவர்கள் வெடிபொருள் தயாரிப்பது குறித்த விடியோவைப் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களும் வெடிபொருள் தயாரிப்பதற்காக முயற்சி செய்துள்ளனர்.

இந்த நிலையில், தீக்குச்சிகளில் இருந்து மருந்தைப் பிரித்தெடுத்து, சிறு குவியலாகக் குவித்து, அதனில் ஒரு பேட்டரியையும் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மருந்தின்மீது நெருப்பைப் பற்றவைத்துள்ளனர். நெருப்பைப் பற்றவைத்த நேரத்தில், தீப்பிழம்பு வெளிப்பட்டு, குவிக்கப்பட்ட மருந்து முழுவதும் வெடித்தது.

இதனையடுத்து, 5 சிறுவர்களின் முகம், உடல்களில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மேற்கொண்ட விசாரணையில், ஒரு மூத்த சிறுவரின் தலைமையில் 4 சிறுவர்கள் யூடியூபைப் பார்த்து வெடிபொருள் தயாரிக்க முற்பட்டபோதுதான், விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் 4 பேர் காயங்களுடனும், ஒருவர் மட்டும் பலத்த காயத்துடனும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணிக்குமாறும் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்கள் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

SCROLL FOR NEXT