முகப்பு
இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஆகஸ்ட் 2024, 10:09 am IST
பகிர்:

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தனது 56-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதிப்பிற்குரிய தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்களது கட்சி உங்களுடன் உறுதியாக இருப்பதால், மக்களுக்கும் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். மக்களுக்கு சேவை செய்யும், உங்களின் அயராத அர்ப்பணிப்பை இந்த ஆண்டு மேலும் வலுப்படுத்தட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.