FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போபால்: 5 படகுகள் தீயில் எரிந்து சேதம்

போபாலில் உள்ள நீர் விளையாட்டு அணையத்தில் 5 படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

Updated On : 20 ஜனவரி 2024, 6:05 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

போபாலில் உள்ள நீர் விளையாட்டு அணையத்தில் 5 படகுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 

மத்திய பிரதேசம் மாநிலம், ஜஹாங்கிராபாத் காவல் நிலையப் பகுதியில் அம்மாநில நீர் விளையாட்டு ஆணையம் உள்ளது. இங்குள்ள படகு ஒன்றில் நண்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இந்த தீயானது மற்ற படகுகளுக்கும் பரவியது.

நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 15 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Advertisement

Advertisement

இருப்பினும் அப்பகுதியில் நங்கூரமிட்டிருந்த குறைந்தது ஐந்து படகுகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எரிந்த படகு ஒன்றின் விலை சுமார் ரூ.20 லட்சம் என விளையாட்டு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீ விபத்து குறித்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அந்த இடத்தை பார்வையிட உள்ளதாகவும் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments