இந்தியா

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேரணி!

DIN

இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி இணைந்து ராஜஸ்தானில் பேரணி மேற்கொண்டனர்.

நாளை (ஜனவரி 26) இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, தில்லியில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் மேக்ரான் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவரைப் பிரதமா் மோடி வரவேற்றார். பின்னா் இருவரும் இணைந்து அங்கு பேரணி மேற்கொண்டனர். அதைத்தொடா்ந்து ஜெய்ப்பூரில் உள்ள கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இருவரும் சென்றனர்.

அதன் பின்னா், இந்தியா-பிரான்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகள், பல்வேறு புவிஅரசியல் மாற்றங்கள் குறித்து இருவரும் கலந்துரையாட உள்ளனா்.

இதையடுத்து குடியரசு தின நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்கும் மேக்ரான், அன்றைய தினம் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு அளிக்கும் தேநீா் விருந்தில் பங்கேற்று, அவருடன் கலந்துரையாட உள்ளாா் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

‘தி தோல்’ சரும கிளினிக்கில் நவீன கருவி அறிமுகம்

கல்வி எங்கே போகிறது?

இயல்பாக இயங்கட்டும் இளையோா்

SCROLL FOR NEXT