இந்தியா

இந்திய ராணுவத்தில் முதல் பெண் சுபேதார்!

DIN

துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான பிரீத்தி ரஜக் இந்திய ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் என்ற பெருமையைப் பெற்றார்.

விளையாட்டு வீராங்கனையான பிரீத்தி ரஜக் கடந்த 2022 டிசம்பர் மாதம் இந்திய ராணுவத்தில் இணைந்தார். அவர் சிறந்த முறையில் பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “ஹவில்தார் பிரீத்தி ரஜக் இன்று சுபேதாராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

சுபேதார் பதவியை முதன்முறையாக பெண் ஒருவர் வகிப்பது இந்திய ராணுவத்திற்கு பெருமையான தருணமாகும்.

பிரீத்தி ரஜக்கின் சாதனை இளைய தலைமுறை பெண்கள் இந்திய ராணுவத்தில் இணைவதற்கு ஊக்கமளிக்கும்.” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹாங்சோ நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் பிரீத்தி ரஜக்கும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும்!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

SCROLL FOR NEXT