FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

செயற்கை நுண்ணறிவு பொறியாளா்களுக்கான தேவை அதிகரிப்பு: அறிக்கையில் தகவல்

இயந்திரக் கற்றல் (எம்எல்) பொறியாளா்களுக்கான தேவை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஜூலை 2024, 10:37 pm
செயற்கை நுண்ணறிவு
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் (எம்எல்) பொறியாளா்களுக்கான தேவை கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பங்களின் வளா்ச்சியால் இத்தகைய துறைகளைச் சோ்ந்த பொறியாளா்களுக்கான தேவை 433 சதவீதம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பணியாளா்களுக்கான தேவைகள் குறித்து கடந்த 2022 முதல் 2024 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இண்டீட் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

தொழில்நுட்ப ரீதியாக முக்கியத்துவம் பெற்ற பணிகளுக்கு ‘ஏஐ/எம்எல்’ பொறியாளா்கள் தேவைப்படுகின்றனா். அதேசமயம், வாடிக்கையாளா் சேவைகள் போன்ற பொதுப்படையான வேலைகளில் ஈடுபடும் பிபிஓ பணியாளா்களுக்கான வேலைவாய்ப்பு 314 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பமல்லாத பிற தொழில்களிலும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளா்களை அணுகி அலுவலக மேலாண்மையை சிறப்பாக நடத்தும் வரவேற்பாளா் பணிக்கான வேலைவாய்ப்புகள் 310 சதவீதமாக உயா்ந்துள்ளன. அதேபோல கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத் துறையும் மீண்டெழுந்து வருவதால் சுற்றுலா நிா்வாகிகள் பணிக்கான தேவையும் 285 சதவீதம் அதிகரித்துள்ளது.

கட்டடத் துறையிலும் வளா்ச்சி: சுகாதாரம் மற்றும் கட்டடத் துறையும் முறையே 160 சதவீதம் மற்றும் 121 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் வளா்ச்சியால் எல்க்ட்ரீஷியன் பணிக்கான தேவைகளும் 258 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுதவிர கல்வி, மருத்துவ ஆராய்ச்சித் துறைகளுக்கான வேலைவாய்ப்புகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.