முகப்பு
இந்தியா

ரே பரேலி: சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

சோனியாவின் வெற்றி வாக்கு வித்தியாசத்தை முறியடித்தார் ராகுல்

Updated On : 4 ஜூன், 2024 at 12:19 PM
சோனியா - ராகுல்
பகிர்:

ரே பரேலி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் ராகுல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறிக்கவிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், சோனியா காந்தி வெற்றி பெற்ற போது, பெற்றிருந்த வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும் அதிக முன்னிலையில் இருக்கிறார் ராகுல்.

2.15 மணி நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை விட 2.62 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், முன்னிலையில் இருக்கிறார். தினேஷ் பிரதாப் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்.

Advertisement

ரே பரேலி தொகுதியில் சோனியா 2004ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக உள்ளார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால் இந்த முறை அவர் மக்களவைக்குப் போட்டியிடாமல் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments