FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திரா காந்தியின் முன்னாள் இல்லத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்த சோனியா!

சோனியா காந்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தீபாவளி நினைவுகள் குறித்து...

பகிர்:

புதுதில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ வீடாக இருந்த 1, சஃப்தர்ஜங் சாலை வளாகத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி நினைவுகளை, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தனது குடும்பத்தினருடன் நினைவு கூர்ந்தார்.

இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள அந்த வீட்டின் இல்லத்தின் தோட்டத்தில் தனது மகள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் பேத்தி மிராயா வத்ராவுடன் அமர்ந்திருந்த சோனியா, தனக்கு தீபாவளி மிகவும் பிடிக்கும் என்றும், அந்த நாள்களில் தனது குடும்பத்தினர் தீபாவளியை எவ்வாறு கொண்டாடினர். அந்த கொண்டாட்டங்கள் மிகவும் அருமையாக இருந்தன என்று தனது பழைய தீபாவளி நினைவுகளை பகிர்ந்துகொண்டு, ஞாயிற்றுக்கிழமை 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளி பதிவில், அப்போதெல்லாம் தற்போது இருப்பதுபோன்ற சிறிய மின்சார அலங்கார விளக்குகள் அதிகம் இல்லை என்றும், வீட்டின் நுழைவாயிலில் இருந்த விநாயகர் சிலை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு முதல் விளக்கு ஏற்றப்பட்டு வழிபாடுகள் தொடங்கும் என்றும், நடைபாதைகள், வீட்டின் கூரை, தோட்டம், குளம் என அனைத்து இடங்களிலும் மண் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டதையும் சோனியா நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

அந்த காலத்தில் மக்கள் தீபாவளி பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்றும், குறிப்பாக 'மத்தாப்புகள்' போன்ற வாணவேடிக்கைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தனது பேத்தியிடம் கூறுகிறார்.

மேலும், அதுபோன்ற நேரங்களில் நிலவிய நீல வானம் மற்றும் இதமான வானிலை குறித்தும் சோனியா நினைவு கூர்ந்தார்.

சோனியாவின் உரையாடலின் இடையே, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி, பட்டாசுகள் வாங்குவதற்காகத் தனது குடும்பத்தைப் பழைய தில்லிக்கு அழைத்துச் செல்வதை பிரியங்கா நினைவு கூர்ந்தார்.

தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பாரம்பரிய காஷ்மீரி உணவுகளையும், இனிப்புகளையும் சமைத்து சாப்பிடுவார்கள் என்று சோனியா நினைவு கூர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ள சோனியா, "தீபாவளியைக் கொண்டாடிய எனது ஆரம்பகால நினைவுகளை மீண்டும் நினைவு கூர்ந்து பார்க்கிறேன் - அதன் மரபுகள், கொண்டாட்டங்கள் மற்றும் அதை மிகவும் சிறப்பானதாக மாற்றிய சிறு தருணங்கள்" என்று கூறியுள்ளார்.

"அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்," என்றும் அவர் மேலும் கூறினார்.

சோனியா காந்தி சமீபத்தில் ‘இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ்’போன்ற சமூக ஊடகங்களில் இணைந்து அறிமுகமானார்.

ஹார்பர்காலின்ஸ் இந்தியா வெளியிட்ட சோனியா காந்தியின் சுயசரிதை நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வர உள்ளது.

சோனியா காந்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தீபாவளி நினைவுகள் வலைதள வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Congress Parliamentary Party chairperson Sonia Gandhi on Sunday shared a video on X, recalling how her family celebrated Diwali when they lived

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.