மணிப்பூரில் இனி வன்முறைக்கு இடமில்லை: அமித் ஷா
மணிப்பூர் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம்
மணிப்பூர் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆய்வுக்கூட்டம் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.
இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உளவுத்துறை தலைமை அதிகாரி தாபன் தேகா, மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, உபேந்திரா திவேதி, மணிப்பூருக்கான பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், மணிப்பூர் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி, மணிப்பூர் காவல்துறை டிஜிபி ராஜீவ் சிங், அஸ்ஸாம் ரைபிள்ஸ் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் சந்திரன் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
அப்போது, மணிப்பூரில் இனி வன்முறை எதுவும் நிகழக்கூடாது என்பதை அதிகாரிகள் உறுதிபடுத்த அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். அங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, தேவைப்பட்டால் கூடுதலாக மத்திய படைகள் அனுப்பி வைக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் அமைதியும், இயல்பு நிலைமையும் திரும்புவதற்காக மத்திய படை போலீசார் வரவழைக்கப்படுவாரக்ள் எனவும் கூறியுள்ளார். வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காணப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.