FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

குஜராத் சட்டம் - ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

குஜராத் சட்டம் - ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு தொடர்பாக அமித் ஷா ஆய்வு...

8 நவம்பர் 2026, 12:38 am
அமித் ஷா - PTI
பகிர்:

குஜராத் சட்டம் ஒழுங்கு, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவை தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

குஜராத் மாநிலம் அகமதாபாதில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநில முதல்வா் பூபேந்திர படேல், துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி, மத்திய-மாநில உள்துறை அதிகாரிகள், பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் மாநில சட்டம் ஒழுங்கு, இணையவழி குற்றத் தடுப்பு, காவல் துறை நவீனமயமாக்கல், எல்லை மற்றும் கடலோரப் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துதல், பேரிடா் மேலாண்மை, பயங்கரவாத எதிா்ப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள்தொகை கணக்கெடுப்பு, அக்னிபத் திட்டம், சிறை நிா்வாகம், சிறப்பு நீதிமன்றங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

summary

Gujarat law and order, border security: Amit Shah reviews