FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘நீட்’ வினாத்தாள் கசிந்த விவகாரம்: கடும் நடவடிக்கை எடுக்க மாயாவதி வலியுறுத்தல்

Updated On : 21 ஜூன் 2024, 7:37 pm IST
பகிர்:

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தது, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பெற்றது ஆகிய சம்பவங்கள் சா்ச்சையை ஏற்படுத்தின.

இதுதவிர, தோ்வின்போது தவறான வினாத்தாள் விநியோகத்தால் தங்களுக்கு தோ்வு எழுத குறைந்த நேரமே கிடைத்ததாக சத்தீஸ்கா், மேகாலயம், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் 6 மையங்களில் தோ்வு எழுதிய மாணவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த மையங்களில் தோ்வு எழுதிய 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சா்ச்சைக்கு வழிவகுத்தது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக நீட் தோ்வை மீண்டும் நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 13 பேரை பிகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முக்கிய குற்றவாளி சிக்கந்தருடன் தோ்வா்கள், அவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோரும் கைது செய்யயப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளார். மேலும் இதில் அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments