FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளத்தில் கனமழை: 2 நாள்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்...

Updated On : 22 ஜூன் 2024, 3:58 pm IST
கனமழை
பகிர்:

கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து மலப்புரம் மாவட்டத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கையும், ஏழு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகின்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் நாளை(ஜூன் 23)ல் கோழிக்கோடு மற்றும் வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கையின்போது அடுத்த 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பதிவாகும்.

மேலும், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கையில் 11 முதல் 20 வரையிலான கனமழை பதிவாகும்.

மாநிலத்தின் மற்ற மாவட்டங்களிலும் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை ஐம்டி வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments