ஜூன் 1 முதல் ஹரியாணா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
ஹரியாணாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹரியாணா பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் ஜூலை 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொகுதிக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொகுதி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.