FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மதுராந்தகம், தாராபுரத்தில் அக். 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

மதுராந்தகம், தாராபுரம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...

கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பள்ளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக். 4 (ஞாயிறு) மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

Advertisement

Advertisement

தொடர்ந்து, அக். 6 (செவ்வாய்க்கிழமை) இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை விடுத்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், தனியார் பள்ளிகளுக்கு அக். 6 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 9 (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

summary

School holidays in Mathuranthakam and Dharapuram on October 5 and 6!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments