மதுராந்தகம், தாராபுரம்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; மின்னணு இயந்திரத்திரத்தில் கோளாறு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறித்து...
இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, தற்போது மின்னணு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இடைத்தேர்தல் நடைபெற்ற இரு தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 11 ஆவது மேசையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை பெற்றுள்ளார்.
Advertisement
Advertisement
இதேபோல், தாராபுரம் தொகுதியிலும் தபால் வாக்குகளில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் முடிவுகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Madhuranthakam, Dharapuram: vote counting has begun
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.