5ஆம் கட்டத் தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 56% வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி நிலவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மக்களவைக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மதிய வேளையில் மந்தமானது. பின்னர் மாலையில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது.
அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 56.68 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 73 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 48.66 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
பிற மாநிலங்களில்...
உத்தர பிரதேசம் - 55.80%
பிகாா் - 52.35%
ஒடிஸா - 60.55%
ஜாா்க்கண்ட் - 61.90%
ஜம்மு-காஷ்மீா் - 54.21%
லடாக் யூனியன் பிரதேசம் - 67.15%
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.