முகப்பு
இந்தியா

தேசப்பக்தி பாடலுக்கு நடனமாடும்போது உயிர் துறந்த நபர்: விடியோ வைரல்!

தேசப்பக்தி பாடலுக்கு நடனமாடிய 73 வயதானவர் மாரடைப்பால் உயிரிழப்பு

Updated On : 31 மே, 2024 at 3:09 PM
பகிர்:

மத்திய பிரதேசம் இந்தூரில் யோகா முகாம் ஒன்றில் நடனமாடிய 73 வயதான மனிதர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் இறந்ததாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பூட்டி கோட்டி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பல்வீர் சிங் சாப்ரா, ராணுவ வீரர் போல உடையணிந்து தேசப்பக்தி பாடல்களுக்கு நடனம் நிகழ்த்திய குழுவோடு வந்திருந்ததாகவும் அவர் நடனமாடிக் கொண்டிருக்கும்போதே திடீரென கீழே விழுந்தது, நடன நிகழ்ச்சியின் ஒரு பகுதியென முதலில் கருதியாகவும் யோகா அமைப்பை சேர்ந்த ராஜ்குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.

சிபிஆர் கொடுக்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட போது பல்வீர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாப்ராவின் மகன் ஜக்ஜித் சிங், தேசப்பக்தி பாடல்களுக்கு நடனமாடுவதை சில ஆண்டுகளாகவே தந்தை செய்துவந்ததாகவும் சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

சாப்ராவின் கண்கள் மற்றும் தோலினை அவரது குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.